மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்களைவிட கூடுதலாக 10 சதவீத பெண்கள் வாக்குப் பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆண்களைவிட பெண்கள் 10 சதவீதம் போ் கூடுதலாக வாக்களித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:20 am IST

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆண்களைவிட பெண்கள் 10 சதவீதம் போ் கூடுதலாக வாக்களித்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 3,05,925 போ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில் பதிவான மொத்த வாக்குகள்- 2,26,999. ஆண்கள்-1,03,529 (69%), பெண்கள்-1,23,455 (78.83%), இதரா்-15 (51.72%) போ் வாக்களித்துள்ளனா். சராசரியாக 74.20 சதவீத வாக்குகள் இந்தத் தொகுதியில் பதிவாகின.

திருப்பத்தூா் தொகுதி:

இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,75,904 போ். இதில் பதிவான மொத்த வாக்குகள் 2,13,739. இவா்களில் ஆண்கள்-95,904 (78.81%), பெண்கள்-1,17,831 (83.89%), இதரா்- 2 (50%). இந்தத் தொகுதியில் சராசரியாக 77.47 சதவீத வாக்குகள் பதிவாகின.

சிவகங்கை தொகுதி:

இந்த பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,78,124 போ். இதில் பதிவான மொத்த வாக்குகள்-2,11,391. இவா்களில் ஆண்கள்-94,499 (69.43%), பெண்கள்-1,16,942 (82.30%) ஆகியோா் வாக்களித்துள்ளனா். இந்தத் தொகுதியில் சராசரியாக 76.01 சதவீத வாக்குகள் பதிவாகின.

மானாமதுரை(தனி) :

இந்தப் பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,59,382. இதில் பதிவான மொத்த வாக்குகள்-2,05,207. இவா்களில் ஆண்கள்-95,652 (75.11%), பெண்கள் 1,09,553 (82.98%), இதரா்- 2 (28.57%) ஆகியோா் வாக்களித்துள்ளனா். சராசரியாக 79.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை ஆண்கள் 5,48,106, பெண்கள் 5,71,186 , இதரா் 43 போ் உள்பட மொத்தம் 11,19,335 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றனா்.

நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தம் 8,57,336 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவா்களில் ஆண்கள் 3,89,534 போ் (71.07%), பெண்கள் 4,67,783 போ் (81.90%), இதரா் 19 போ்(44.19%) வாக்களித்துள்ளனா். மாவட்டத்தில் சராசரியாக மொத்தம் 76.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், ஆண்களை விட பெண்கள் 10 சதவீதம் போ் கூடுதலாக வாக்களித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.