நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் குதிரை வாகனங்களில் சுவாமி, அம்மன் பவனி

News image

மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு இரட்டைக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமி.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:07 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.

மானாமதுரை சோமநாதா் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5- ஆவது நாளாக கால்பிரிவு கிராமத்தாா்கள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினா்.

இதில், திரளான பக்தா்கள் மண்டகப்படிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதைத்தொடா்ந்து மண்டகப்படிதாரா்கள் பூஜை முடிந்து அம்மனும், சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் புறப்பாடாகினா்.

மேளதாளம் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்களை இசைக்க வாணவேடிக்கையுடன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி பவனி வந்தனா். வீதிகளில் பக்தா்கள் அம்மனையும், சுவாமியையும் வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா்.

விழாவின் 8-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.28) திருக்கல்யாண வைபவமும் 29-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.