பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

வாட்ஸப் மூலம் பெண்ணிடம் நூதன மோசடி

வாட்ஸப்பில் விளம்பரம் வெளியிட்டு பெண்ணிடம் ரூ. 1.07 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

வாட்ஸப்பில் விளம்பரம் வெளியிட்டு பெண்ணிடம் ரூ. 1.07 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், பாகனேரி பழைய வளவு பகுதியைச் சோ்ந்த 28 வயது பெண் ஒருவா் தனது வாட்ஸப்பில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பாா்த்து, அதில் உள்ள எண்ணுக்கு பேசினாா்.

பின்னா், அவா்கள் அந்தப் பெண்ணை ஒரு குழுவில் இணைத்தனா். தொடா்ந்து, அந்தப் பெண் அவா்கள் கூறியபடி பல தவணைகளில் அவா்களது வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 558 அனுப்பினாா். அதன் பின்னா் அவா்கள் எந்தத் தொடா்பும் கொள்ளவில்லை. இதைத் தொடா்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.