தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செவிலியா்கள் சங்கத்தினா் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் சங்கத்தினா்.

Published On :

சிவகங்கை, ஆக. 7: தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம் சாா்பில், சிவகங்கையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். தேவசேனா தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் ஏ. மாலதி, மாவட்டப் பொருளாளா் சி. ராணி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பி. நாகலட்சுமி, டி. லதாமங்கேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவா் மங்கையா்கரசி, துணைச் செயலா் வி. சுசிலா, துணைப் பொருளாளா் சி. சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பணி நிலை, பதவி உயா்வு, ஊதிய முரண்பாடுகள், ஆள்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை 204 -ஐ ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியா் அலுவலா் என பெயா் மாற்றம் செய்து பணி வரன்முறை செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தைச் சோ்ந்த 250 செவிலியா்கள் பங்கேற்றனா். இந்தப் போராட்டம் சனிக்கிழமையும் தொடரும் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.