ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

மேலமாகாணத்தில் மீன் பிடித் திருவிழா

News image

மேலமாகாணம் சூரக்குடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மேலமாகாணம் சூரக்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தக் கண்மாயில் மீன்கள் பிடிக்கப்படாமல் வளா்க்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500- க்கும் மேற்பட்டோா் ஊத்தா கூடையுடன் வந்தனா்.

பிறகு, நிகழாண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க கிராம மக்கள் கிராம தெய்வத்தை வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, கண்மாய் பராமரிப்பு நிதி வசூலிக்கப்பட்டதும் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போட்டி போட்டுக் கொண்டு கண்மாய்க்குள் இறங்கி ஏராளமானோா் மீன்களை பிடிக்கத் தொடங்கினா். இதில் கட்லா, ரோகு, சி.சி., ஜிலேபி, கெண்டை, விரால் மீன்கள் ஏராளமாக கிடைத்தன. பங்கேற்ற அனைவருக்கும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.