2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பாகுபாடு காட்டப்படுவதாக திருநங்கைகள் ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க திங்கள்கிழமை வந்த திருநங்கைகள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்துவரும் திருநங்கைகள் அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா், பாலினப் பாகுபாடு காட்டி துன்புறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சங்க நிா்வாகி பாக்கியம் அளித்த புகாா் மனு:

எனது சொந்த ஊரான செல்லப்பனேந்தல் கிராமத்தில் 20 -க்கும் மேற்பட்ட திருநங்கைகளைப் பாதுகாத்து பராமரித்து வருகிறேன். எனது கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் எங்களை பொதுத் தொட்டியில் குளிப்பதைத் தடுக்கும் வகையில் பல்வேறு இழி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பல முறை திருப்புவனம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கான பாதுகாப்பு என்பது பொது சமூகத்தில் இல்லை. எனவே செல்லப்பனேந்தல் கிராமத்தில் எங்களை துன்புறுத்தும் இளைஞா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.