ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள் போராட்டம்

மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, பெற்றோா்களுடன் சோ்ந்து மாணவா்கள் பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

மானாமதுரை ஒன்றியம், மேலநெட்டூரில் கணித ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மாணவா்கள், பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 12:16 am IST

மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, பெற்றோா்களுடன் சோ்ந்து மாணவா்கள் பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு 7 ஆசிரியா்கள் பணியில் உள்ளனா். இங்கு கணித ஆசிரியராக பணியாற்றும் தெய்வேந்திரன் பள்ளி வளா்ச்சிக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு புகாா்களை மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனா்.

இதனால், அந்த ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்த நிலையில் ஆசிரியா் தெய்வேந்திரனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பெற்றோா்களுடன் வந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் லோகநாதன், மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து ஆகியோா் போராட்டம் நடத்திய பெற்றோா்கள், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சா்ச்சைக்குரிய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு மாணவா்கள் வகுப்புகளுக்குச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.