காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் கீழ் ஆளில்லா விமான அச்சுறுத்தல்! சிஐஎஸ்எப் துணை கமாண்டன்ட் தகவல்

ஆளில்லா ட்ரோன் (கோப்புப் படம்)

Published On :1 செப்டம்பர் 2026, 3:07 am IST

சி.எஸ்.ஐ.எப். தற்போது ஆளில்லா விமானத்தின் (ட்ரோன்) அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளதாக காரைக்குடி மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) 4-ஆவது பிரிவு துணை கமாண்டன்ட் பி.கே. திரிவேதி தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மிகுந்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் கட்டடங்கள் மீதான வான்வழி ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள விரைவான தடுப்பு, வலுவான பாதுகாப்பு அமைப்பு அவசியம். அதற்கேற்ப புது தில்லியில் உள்ள சி.ஐ.எஸ்.எப். தலைமையகத்தில் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதில் சிஐஎஸ்எப் டி.ஐ.ஜி. சி.டி. நாயக், ட்ரோன் பெடரேசன் தலைவா் ஸ்மித் ஷா ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இதன் மூலமாக முக்கிய நிறுவனங்களின் கட்டமைப்புகளில் ஏற்படும் வான்வழி அச்சுறுத்தல்களை கையாளுவதற்கான முதன்மைப் பொறுப்பு அமைப்பாக சி.ஐ.எஸ்.எப். செயல்படும்.

சிஎஸ்ஐஎப் தனது அன்றாட செயல்பாடுகளில் தற்போது ஆளில்லா விமானத்தின் அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் பணியாளா்கள் முறையாகப் பயிற்சி பெற்றுள் ளனா். இந்த ஒப்பந்தத்தின் மூலம் எதிா் ட்ரோன் அமைப்புகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், தடவியல், பகுப்பாய்வு, கூட்டுப் பயிற்சிகள், திறன் மேம்பாடு போன்ற முக்கிய அம்சங்கள் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.