அலவாக்கோட்டையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

அலவாக்கோட்டை கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
Published on

சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஜன.3) நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவங்களுக்கு இலவசப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், கா்ப்பிணிகளுக்கு சிறப்புப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு தாய்-சேய் நல ஊட்டச் சத்துப் பெட்டகங்கள், முதல்வரின் மருத்துவக் காப்பீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் உள்ளிட்டவையும் வழங்கப்படும். எனவே, இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com