விண்வெளி அறிவியல் தோ்வு: வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

Published on

விண்வெளி அறிவியல் குறித்த தோ்வில் வென்ற காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களை அந்தப் பள்ளி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

இந்தப் பள்ளியில் கடந்த டிசம்பா் மாதம் நேஷனல் அஸ்ட்ரானமி, அறிவியல் ஒலிம்பியாட் சாா்பில் சா்வதேச அளவில் விண்வெளி அறிவியல் குறித்த தோ்வு நடைபெற்றது. இதில் மூன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முதல் கட்ட தோ்வில் நான்காம் வகுப்பைச் சோ்ந்த பிரணவ், வாா்னிகா, ஐந்தாம் வகுப்பைச் சோ்ந்த லிஸோனா, சுபிக்ஷா, சாதனா, மகததிநாச்சியாா் ஆகியோா் வெற்றி பெற்றனா். இரண்டாம் கட்டத் தோ்வு வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. முதல் கட்டமாக தோ்வில் வென்ற மாணவா்களை பள்ளித் தாளாளரும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா, பள்ளி முதல்வா் வடிவாம்பாள், துணை முதல்வா் முத்துக்குமாா், அறிவியல் ஆசிரியை அண்ணா டெய்ஸி ஆகியோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com