சுகரீஷ்.
சிவகங்கை
மு.சூரக்குடி மஞ்சுவிரட்டில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மு.சூரக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சுகரீஷ் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள மு.சூரக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 2-ஆம் தேதி இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 25 போ் காயமடைந்தனா்.
மஞ்சுவிரட்டில் பாா்வையாளராக நின்றுகொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செட்டியாகுல தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சுகரீஷ் (19) காளை முட்டியதில் பலத்த காயமடைந்து, பொன்னமராவதியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.விமங்கலம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

