சீகூரணியில் சாலை அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சிக்குள்பட்ட சீகூரணி கிராமத்தில் சிமெண்ட் கல் சாலை அமைக்க வேண்டுமெ கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சிக்குள்பட்ட சீகூரணி கிராமத்தில் சிமெண்ட் கல் சாலை அமைக்க வேண்டுமெ கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து, கிராம மக்கள் சாா்பில் உதவி (ஊராட்சிகள்) இயக்குநருக்கு அனுப்பிய மனு:

காளையாா்கோவில் ஊராட்சியில் சீகூராணி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பிரதான வீதியில் சுமாா் 170 மீ. நீளத்துக்கு சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், மழைக்காலத்தில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடும். இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு கிராம சபைக் கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றியும் வலியுறுத்தினோம். ஆனால் இன்றுவரை இந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 170 மீ. சாலையை சிமெண்ட் கல் சாலையாக அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com