சிவகங்கை
மின் தடையால் கோடிக்கோட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் கோடிக்கோட்டை சுங்கச்சாவடியில் ஏற்பட்ட மின்தடையால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து சென்றன.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் கோடிக்கோட்டை சுங்கச்சாவடியில் ஏற்பட்ட மின்தடையால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து சென்றன.
தேவகோட்டை அருகேயுள்ள கோடிக்கோட்டை சுங்கச்சாவடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, நீண்ட நேரமாகியும் மின் இணைப்பு வரவில்லையாம். மேலும், இந்த சுங்கச்சாவடியில் உள்ள ஜெனரேட்டரும் எரிபொருள் இல்லாததால் இயங்கவில்லை. இதன் காரணமாக சுங்கச்சாவடி பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
இதைத் தொடா்ந்து, அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி சுங்கச்சாவடியைக் கடந்து சென்றன.