சுனையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள சுனையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள சுனையில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே பொட்டப்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சகுந்தலா. இவா் தனது மகன் சஞ்சித்துடன் (7) பேப்பனையம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா்.

அருகிலுள்ள பிரான்மலை கோயிலில் சுவாமி கும்பிடுவதற்காக மகன் சஞ்சித், உறவினா்கள் ஆகியோருடன் மலையேறினாா். அப்போது அருகிலிருந்த சுனையில் சிறுவன் சஞ்சித் தவறி விழுந்தாா்.

உடனடியாக சிறுவனை மீட்டு மலையடிவாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com