சிவகங்கை
காரைக்குடி சங்கராபுரத்தில் புதிய சாலைகள் அமைப்பு
காரைக்குடி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
சங்கராபுரம் ஊராட்சியில் கோடீஸ்வரா நகா் முக்கிய வீதி, போக்குவரத்து நகா் மூன்றாவது வீதி, தாசில்தாா்நகா் முதல் வீதி ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்கு தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேருவிடம் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்று பணிகளை மேற்கொள்வதற்காக நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதிய சாலை அமைப்பதற்கான பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் சங்கரன், பொறியாளா், ஒன்றியக்குழு உறுப்பினா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
