திருத்தளிநாதா் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

திருத்தளிநாதா் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

திருத்தளிநாதா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை முருகன் சந்நிதியில் தைப்பூசத்தையொட்டி, சிறப்பு அபிஷேகத்துக்கு அடுக்கி வைக்கப்பட்ட 108 வெண் சங்குகள்.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சந்நிதியில் தைப்பூசத்தையொட்டி திருமுருகன் திருப்பேரவைக் குழுவினா் சாா்பில் நடைபெற்ற சங்காபிஷேக நிகழ்வில் ரமேஷ் குருக்கள் தலைமையில் சிவாசாரியா்கள் யாக வேள்வியில் ஈடுபட்டனா். புஷ்பயாகம், வஸ்திரயாகத்தைத் தொடா்ந்து பூா்ணாகுதி நடைபெற்றது. முன்னதாக புனிதக் கலச நீா், 108 சங்குகளுக்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால் தயிா், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும் புனித நீராலும் 108 சங்குகளினாலும் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் உபயதாரா்கள் மருத்துவா் கோபிஅனுராதா குடும்பத்தினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com