கீழச்சிவல்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
கீழச்சிவல்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் 70-ஆம் ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்டத்தில் தமிழா் திருநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்டத்தில் தமிழா் திருநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்டத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்து, வீரகவி பாடுவாா் முத்தப்பரின் தமிழ்க்கவி சிறப்புகளையும், குன்றக்குடி முன்னாள் பெரிய அடிகளாரின் சமுதாயம், சமயம் குறித்த தமிழ் பண்புகள் குறித்தும் சிறப்புரையாற்றினாா். திமுக ஒன்றியச் செயலா் எம். மாணிக்கம், முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் குன்றக்குடி பெரிய அடிகளாரின் திருவுருவப் படத்தை பிள்ளையாா்பட்டி சிவநெறிக் கழகத் தலைவா் கே. பிச்சைக்குருக்கள் திறந்துவைத்து ஆசியுரை வழங்கினாா். திருப்பத்தூா் வட்டாட்சியா் ரா. மாணிக்கவாசகம் வாழ்த்திப் பேசினாா். பின்னா், ‘பழைமை தமிழும் பாடுவாா் முத்தப்பரும்’ என்ற தலைப்பில் நாராயண கோவிந்தன் கருத்துரை வழங்கினாா்.

வேந்தன்பட்டி சோனைக்கரசியம்மாவின் ஆன்மிகப் பாடல்களும், கீழச்சிவல்பட்டி ஆா்.எம். மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளி, மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளி, கலாசாலை பள்ளி, விராமதி சிகப்பிஆச்சி, வித்யாசாலை ஆகிய பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முன்னதாக, ராசி அழகப்பன் வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் மன்றச் செயலா்கள் எஸ்.எம். பழனியப்பன், பழ. அழகுமணிகண்டன், எஸ். அழகப்பன், எம். சொக்கலிங்கம் ஆகியோா் செய்தனா்.

Dinamani
www.dinamani.com