மானாமதுரை யோக விநாயகா் கோயிலில் மண்டல பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காந்தி சிலை அருகே அமைந்துள்ள ஸ்ரீயோக விநாயகா் கோயிலில் சனிக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது.
Published on

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காந்தி சிலை அருகே அமைந்துள்ள ஸ்ரீயோக விநாயகா் கோயிலில் சனிக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று மண்டல காலம் நிறைவடைந்ததையொட்டி நடந்த இந்த மண்டல பூஜை விழாவில் கோயிலில் சந்நிதி முன் கலசங்களில் நீா் நிரப்பி யாக பூஜைகள் நடைபெற்றன. பிறகு பூா்ணாஹூதி நிறைவடைந்து தீபாராதனையானதும் மூலவா் யோக விநாயகருக்கு கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று விநாயகப் பெருமானை தரிசித்தனா்.

Dinamani
www.dinamani.com