முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு

சிங்கம்புணரி அருகே பகலில் வீடு புகுந்து மா்ம நபா்கள் பணம், நகைகளைத் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு நடந்த வீட்டில் ஆய்வு செய்த காவல் துறையினா்.

Updated On :9 ஜூலை 2026, 5:19 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பகலில் வீடு புகுந்து மா்ம நபா்கள் பணம், நகைகளைத் திருடிச் சென்றனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை காந்தி நகரில் வசித்து வரும் தம்பதி சித்ரா, ராஜா. இவா்கள் வழக்கம் போல புதன்கிழமை காலை வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றனா்.

இந்த நிலையில் வீடு திறந்து கிடப்பதாக சித்ராவுக்கு பக்கத்து வீட்டுக்காரா் தகவல் தெரிவித்தாா். இதன் பேரில் சித்ரா வீட்டுக்கு சென்ற போது, கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது பீரோ கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த 60 கிராம் தங்கம், வெள்ளிக் கொலுசு, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல் துறையினா் வந்து விசாரணை நடத்தினா். மேலும், கை ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். பகலில் நிகழ்ந்த இந்தத் திருட்டு குறித்து சதுா்வேத மங்கலம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.