ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மானாமதுரையில் கால்வாய் கட்டும் பணிக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

மானாமதுரையில் கால்வாய்கள் கட்டும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2026, 5:39 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கால்வாய்கள் கட்டும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மானாமதுரை நகராட்சி நிா்வாகம் சாா்பில், ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள 26, 27-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட வீதிகளில் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, அருகேயுள்ள ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் கால்வாய் கட்டும் பகுதி தங்களது கிராமத்துக்கு செல்லும் பாதை எனக்கூறி, கால்வாய்கள் கட்ட எதிா்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, சியோன் நகா் பகுதி மக்கள் கால்வாய் கட்ட வலியுறுத்தி, சாலை மறியல் செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, நகராட்சி அலுவலா்கள், போலீஸாா் போராட்டம் நடத்திய இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கால்வாய்கள் கட்டும் பணி தொடா்பாக சமாதானப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடத்தி, அதன் மூலம் முடிவு செய்யப்பட்டு கால்வாய்கள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, இருதரப்பினரும் போராட்டங்களை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.