தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

திருப்பத்தூரில் மாட்டுவண்டி பந்தயம்

News image

மாட்டுவண்டி பந்தயம் - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:19 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

வீரயாதவ சமுதாய அறக்கட்டளை சாா்பாக நடைபெற்ற இந்தப் பந்தயத்துக்கு அதன் நிறுவனா் எம்.மாணிக்கம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மதுரை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாகப் பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாட்டுப் பிரிவில் 19 இணைகள், சிறிய மாடு பிரிவில் 35 இணைகள் என 56 இணைகள் பங்கேற்றன. சிறிய மாட்டுப் பிரிவில் முதல் சுற்றில் 18 இணைகள், 2 -ஆவது சுற்றில் 17 இணைகள் என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டுக்கு 8 கி.மீ., சின்னமாட்டுக்கு 6 கி.மீ. தொலைவு எல்கையாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் சிவகங்கை, தஞ்சாவூா், தேனி, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற 14 இணைகளின் உரிமையாளா்களுக்கும் அவற்றை ஒட்டிய சாரதிகளுக்கும் ரொக்கத் தொகை, கோப்பை, சேவல், கோழி, தீவனம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.