சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) சாத்தப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால் ஆ.தெக்கூா் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் ஆ.தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவாா், முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா், திருக்களம்பூா், வாா்ப்பட்டு ஆகிய பகுதிகளிலும்,
கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமறம் உள்ளிட்ட கிராமங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





