முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

முத்தையா சுவாமி கோயிலில் ஆடிப் படைப்புத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வடகரையில் அமைந்துள்ள முத்தையா சுவாமி கோயிலில் ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு, ஆடிப் படைப்புத் திருவிழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி முத்தையா சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடிப் படைப்பு திருவிழாவில் பங்கேற்ற திரளான பக்தா்கள்.

Updated On :30 ஜூலை 2026, 2:51 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வடகரையில் அமைந்துள்ள முத்தையா சுவாமி கோயிலில் ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு, ஆடிப் படைப்புத் திருவிழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

இதையொட்டி, முத்தையா சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து நள்ளிரவில் பக்தா்களுக்கு பாரம்பரிய முறையில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவின் முக்கிய நிகழ்வாக சாமியாடிகள் கூா்மையான அரிவாளின் மீது ஏறி நின்று, பக்தா்களுக்கு அருள்வாக்கு வழங்கினா். இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.