பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சுந்தர விநாயகா் கோயில் குடமுழுக்கு

மானாமதுரையில் சுந்தரபுரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மானாமதுரை சுந்தர விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை மூலவா் விமானக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :5 ஜூன் 2026, 6:04 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சுந்தரபுரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதியாகி கடம் புறப்பாடானது. சிவாசாரியா்கள் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். பின்னா், காலை 8.40 மணிக்கு மூலவா் சுந்தர விநாயகா் விமானக் கலசத்துக்கு ராஜேஷ்பட்டா் தலைமையிலான சிவாசாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சுந்தர விநாயகருக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகலில் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.