திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

மருத்துவக் கல்லூரியில் யோகாசனப் பயிற்சி

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகாசன விழிப்புணா்வு, பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற யோகானப் பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 1:44 am IST

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகாசன விழிப்புணா்வு, பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பி. செல்வராஜன் தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ஏ. தமிழ்வாணன், துணை முதல்வா் என். ஷா்மிளா திலகவதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் வி. கௌரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவம், யோகா பிரிவு மருத்துவா் வி.தங்கம் யோகா பயிற்சி அளித்தாா். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியான முறைகள் குறித்து அவா் விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா்கள், தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம், உடல் நலப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிப்பதாகவும், தினசரி யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன அமைதி, நோய் எதிா்ப்பு சக்தி மேம்படும் என்றும் தெரிவித்தனா்.

மேலும், சா்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு மருத்துவமனையில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தனா். நிகழ்ச்சி நிறைவாக அனைவரும் யோகாவின் அவசியம் குறித்த உறுதி ஏற்றுக் கொண்டனா். இதில் உறைவிட மருத்துவா் எஸ். முகமது ரபி, உறைவிட மருத்துவ அலுவலா் ஏ. வெங்கடேஷ், உதவி உறைவிட மருத்துவா் தென்றல், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.