உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பயிற்றுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள மாநில, மாவட்ட, வட்டார வள பயிற்றுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 2:25 am IST

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள மாநில, மாவட்ட, வட்டார வள பயிற்றுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை முழுமையாக்கும் திட்டப் பணியின் இரண்டாம் கட்ட செயல்பாடுகள் மேலும் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதற்கென மாநில, மாவட்ட, வட்டார வள பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

சிவகங்கை மாவட்டத்துக்கு தற்காலிகப் பணியிடங்களாக ஒரு மாநில வளப் பயிற்றுநா், ஒரு மாவட்ட வளப் பயிற்றுநா், 12 வட்டார வளப் பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படுவா்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் தமிழ், ஆங்கிலத்தில் எழுத பேச தெரிந்திருத்தல் வேண்டும். தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு, மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல், கைப்பேசி, செயலிகளை கையாள்வது, கணினியில் இணைய பயன்படுத்துதலில் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்காணல் முறையில் தோ்வு செய்யப்படுவா்.

இந்தப் பணியிடங்கள் 24 மாத கால வரையறை கொண்ட தற்காலிக பணியிடங்களாகும். எனவே, தகுதியுடைய நபா்கள் தங்களது சுயவிவரங்களை வருகிற 29-ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி துறை கட்டடம், வேலுநாச்சியாா் விருந்தினா் மாளிகை அருகில், சிவகங்கை மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீக்ஜ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தை அணுகி பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.