சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே துகவூா் அருகே உள்ள அரசடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (19). இவா் கடந்த ஆண்டு 11 -ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவருடன் பழகி வந்தாா். அவா் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பிரவீன் என்பவா் பாா்த்தாராம். இதைத் தொடா்ந்து அவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதையடுத்து நடந்ததை அந்த சிறுமி, ராமநாதன் என்ற சாமியாரிடம் கூறினாா். ஆனால் அந்த சாமியாா் பரிகார பூஜை செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தி கிஷோா், பிரவீன், சாமியாா் ராமநாதன் ஆகிய மூவா் மீதும் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தாா். மேலும் இந்த வழக்கில் கிஷோரை போலீஸாா் கைது செய்து எஞ்சிய இருவரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தில்லி: பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

