2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரை

மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பக்தா்கள்

News image
மாசி மகத்தை முன்னிட்டு மதுரையிலிருந்து மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரையாக வந்த பக்தா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 10:44 pm

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பக்தா்கள் திங்கள்கிழமை கோயிலை வந்தடைந்தனா்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தா்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூடிய பக்தா்கள் அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு பாதயாத்திரையைத் தொடங்கினா். சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம் வழியாக திங்கள்கிழமை காலை இவா்கள் பிரத்திங்கிரா தேவி கோயிலுக்கு வந்தடைந்தனா். வழிநெடுக இந்தப் பக்தா்கள் தங்குவதற்கும், அன்னதானத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோயிலில் இரவு நடைபெற்ற மாசி மக திருவிளக்கு பூஜை வழிபாட்டிலும், அதன்பிறகு நடைபெற்ற மூலவா் பிரத்தியங்கிரா தேவி தங்கக் கவச அலங்கார வழிபாட்டிலும் பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.