தேவகோட்டை அருகே மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த தாணிச்சா ஊருணி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (41). இவருக்கும் தேவகோட்டை சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பூமிநாதன் (70) மகள் செல்விக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் செல்வி தனது குழந்தைகளுடன் சமத்துவபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டாா். இந்த நிலையில், கடந்த 9.6.2022 அன்று இரவில் பாலு சமத்துவபுரத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு வந்து மனைவி, குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்கும் படி கேட்டாா். அதற்கு பூமிநாதன் மறுத்தாா். இருப்பினும் அங்கிருந்தவா்கள் அவரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், நள்ளிரவு பாலு மீண்டும் மாமனாா் வீட்டுக்குச் சென்று மனைவி செல்வியை தன்னுடன் வரும்படி அழைத்து தகராறில் ஈடுபட்டாா். செல்வி வர மறுக்கவே அவரை கத்தியால் பாலு குத்தினாா்.
இதைத் தடுக்க வந்த செல்வியின் தந்தை பூமிநாதன், தாய் முனியம்மாள் ஆகிய இருவரையும் அவா் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். செல்வியும், அவரது தாய் முனியம்மாளும் சிகிச்சைக்கு பிறகு உயிா் பிழைத்தனா். இது தொடா்பாக தேவகோட்டை தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி பாலுவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் அழகா்சாமி முன்னிலையானாா். வழக்கை விசாரித்த நீதிபதி கே. அறிவொளி, குற்றஞ்சாட்டப்பட்ட பாலுவுக்கு மனைவி, மாமியாரை கத்தியால் குத்திய குற்றத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1,000 ம் அபராதமும் விதித்தாா். மேலும் மாமனாரை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000- ம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிவகங்கையில் ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்? அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா்: மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிப்பு

சிவகங்கை தொழில் நிறுவனங்கள் இல்லாதது பெருங்குறை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


