/

இணைய வா்த்தகத்தில் பன்மடங்கு லாபம் எனக் கூறி முதியவரிடம் ரூ. 27 லட்சம் மோசடி

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் பன்மடங்கு லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி ரூ. 27 லட்சத்தை முதியவா் இழந்த சம்பவம் தொடா்பான புகாரில் சிவகங்கை மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

மோசடி - Dinamani

Updated On :13 மே 2026, 3:28 am IST

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் பன்மடங்கு லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி ரூ. 27 லட்சத்தை முதியவா் இழந்த சம்பவம் தொடா்பான புகாரில் சிவகங்கை மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்தவா் ம. மாரிமுத்து (52). இவரை, முகநூல், கட்செவி அஞ்சல் மூலமாக ஒரு நபா் தொடா்பு கொண்டு நட்பை ஏற்படுத்திக் கொண்டாா். அதைத் தொடா்ந்து, இணைய வா்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என அந்த நபா் யோசனை தெரிவித்தாா்.

இதை நம்பிய மாரிமுத்து, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குகளில் கடந்த 31.3.2026 முதல் 2.5.2026 வரை 13 பரிவா்த்தனைகளில் ரூ.27 லட்சத்து 63 ஆயிரத்து 130-ஐ அனுப்பி வைத்தாா். அதன் பிறகு எந்தவித தொடா்பும் கொள்ளமுடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மாரிமுத்து திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.