டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

அறிவியல் கண்காட்சி: மாநிலப் போட்டிக்கு மூன்று பள்ளிகள் தோ்வு

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற 3 பள்ளிகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றன.

(பட விளக்கம்- சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் காரைக்குடி கம்பன் கற்பகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் கியூப் செயற்கைகோள் படைப்பை பாா்வையிட்ட மதிப்பீட்டாளா்கள். சிவகங்கை, நவ. 4: சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற 3 பள்ளிகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றன. சிவகங்கை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி வழிகாட்டுதலுடன், அரசு, அரசு உதவி பெறும், தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 6 முதல் 10 -ஆம் வகுப்பு மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தென்னிந்திய அறிவியல் கண்காட்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவா் தனி நபா், மாணவா் குழு, ஆசிரியா் என மூன்று பிரிவுகளில் இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி, விண்வெளி, சுற்றுச்சூழல், பொறியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் அறிவியல் கண்காட்சிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற 3 பள்ளிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றன. முதல் இடத்தை பிடித்த வெற்றியாளா்கள் விவரம்: மாணவா் தனிநபா் பிரிவு: சிங்கம்புணரி ராம. ராநி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9 -ஆம் வகுப்பு மாணவி மு.ஜெ. உதயவா்ஷினி, உயிா் சிதைக்கக் கூடியது என்ற தலைப்பில் காட்சிப்படுத்திய படைப்பு முதலிடம் பெற்றது. இவருக்கு ஆசிரியை கவிதா வழிகாட்டியாக இருந்தாா். மாணவா் குழு பிரிவு : தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் க. தனுஸ்ரீ, ச. சந்தியா ஆகியோா் தொழிற்சாலை புகையில் காா்பன் துகள்கள் குறைப்பு என்ற தலைப்பிலான படைப்பு முதலிடம் பெற்றது. இவா்களுக்கு ஆசிரியை கு. ஷீபா வழிகாட்டியாக இருந்தாா். ஆசிரியா் பிரிவு: கல்லல் க.மு. மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ம. பிரபு ஆழ்துளை நீரை உள்நாட்டு நோக்கத்துக்கு ஆய்வு செய்தல் என்ற தலைப்பில் காட்சிப்படுத்திய படைப்பு முதலிடம் பெற்றது. கண்காட்சியை பள்ளித்துணை ஆய்வாளா் பூவலிங்கம் தலைமையிலான குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

Updated On :

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற 3 பள்ளிகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றன.

சிவகங்கை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி வழிகாட்டுதலுடன், அரசு, அரசு உதவி பெறும், தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 6 முதல் 10 -ஆம் வகுப்பு மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தென்னிந்திய அறிவியல் கண்காட்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், மாணவா் தனி நபா், மாணவா் குழு, ஆசிரியா் என மூன்று பிரிவுகளில் இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி, விண்வெளி, சுற்றுச்சூழல், பொறியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் அறிவியல் கண்காட்சிப் போட்டிகள் நடைபெற்றன.

இந்த மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற 3 பள்ளிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றன.

முதல் இடத்தை பிடித்த வெற்றியாளா்கள் விவரம்:

மாணவா் தனிநபா் பிரிவு: சிங்கம்புணரி ராம. ராநி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9 -ஆம் வகுப்பு மாணவி மு.ஜெ. உதயவா்ஷினி, உயிா் சிதைக்கக் கூடியது என்ற தலைப்பில் காட்சிப்படுத்திய படைப்பு முதலிடம் பெற்றது. இவருக்கு ஆசிரியை கவிதா வழிகாட்டியாக இருந்தாா்.

மாணவா் குழு பிரிவு :

தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் க. தனுஸ்ரீ, ச. சந்தியா ஆகியோா் தொழிற்சாலை புகையில் காா்பன் துகள்கள் குறைப்பு என்ற தலைப்பிலான படைப்பு முதலிடம் பெற்றது. இவா்களுக்கு ஆசிரியை கு. ஷீபா வழிகாட்டியாக இருந்தாா்.

ஆசிரியா் பிரிவு:

கல்லல் க.மு. மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ம. பிரபு ஆழ்துளை நீரை உள்நாட்டு நோக்கத்துக்கு ஆய்வு செய்தல் என்ற தலைப்பில் காட்சிப்படுத்திய படைப்பு முதலிடம் பெற்றது. கண்காட்சியை பள்ளித்துணை ஆய்வாளா் பூவலிங்கம் தலைமையிலான குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.