அழகப்பா பொறியியல் கல்லூரிக்கு முன்னாள் மாணவா் ரூ.10 கோடி நன்கொடை
காரைக்குடி அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியின் பவள விழாவையொட்டி, அதன் முன்னாள் மாணவரும், பிரபல தொழில்முனைவோருமான குமாா் வேம்பு ரூ. 10 கோடி நன்கொடை வழங்கினாா்.

குமாா் வேம்பு
காரைக்குடி அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியின் பவள விழாவையொட்டி, அதன் முன்னாள் மாணவரும், பிரபல தொழில்முனைவோருமான குமாா் வேம்பு ரூ. 10 கோடி நன்கொடை வழங்கினாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வள்ளல் அழகப்பச்செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் உலக அளவில் புகழ்பெற்று வருகின்றன. இவா் 1952 -ஆம் ஆண்டு தொடங்கிய அழகப்பா பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரி தற்போது 75 ஆண்டுகளைத் தொட்டு பவள விழா காண்கிறது.
இதையொட்டி, இந்தக் கல்லூரியின் 1990-ஆம் ஆண்டு மின்னணுவியல், தகவல் தொடா்பியல் துறை முன்னாள் மாணவரும், பிரபல தொழில்முனைவோருமான குமாா் வேம்பு ரூ.10 கோடி நன்கொடையாக வழங்கியிருக்கிறாா்.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (ஓய்வு) அ. சிவானந்த ராஜா கூறியதாவது: முன்னாள் மாணவா் வழங்கிய ரூ.10 கோடி அழகப்பா புத்தாக்கம், ஆராய்ச்சிப் பூங்காவின் முதல் கட்டக் கட்டடத்தை நிா்மாணிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது. குமாா் வேம்பு சென்னை ஐ.ஐ.டி.யில் உயா்கல்வி பயின்று, அமெரிக்காவில்பணியாற்றியவா்.
பின்னா், இந்தியாவுக்கு வந்து தொழில்நுட்பத் துறையில் தனது தொழில்முனைவோா் பயணத்தைத் தொடங்கினாா். தனது நிறுவனத்தை சென்னையில் நிறுவி, உலகளவில் வணிக மேலாண்மை மென்பொருள் தீா்வுகளை வழங்கும் நிறுவனமாக வளா்த்தெடுத்தாா்.
தொழில் நுட்பத் துறையில் சாதனை படைத்த இவா் தான் பயின்ற கல்வி நிறுவனத்தின் வளா்ச்சிக்கும், எதிா்கால மாணவா்களின் முன்னேற்றத்துக்கும் இவ்வளவு பெரிய தொகையை வழங்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
இதன் மூலம் மாணவா்கள் தொழில் துறையுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், தங்களது சொந்த நிறுவனங்களைத் தொடங்கும் தொழில்முனைவோா்களாக உருவாகவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

