நிா்வாகப் பணியாளா்களுக்கு மின் ஆளுமைப் பயிற்சி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அகத்தர உறுதி மையம் சாா்பில், நிா்வாக செம்மையில் இணைய மேம்பாடு என்ற தலைப்பில் பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கான மின் ஆளுமைப் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடை பெற்றது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிா்வாகப் பணியாளா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற மின்ஆளுமைப் பயிற்சியின் தொடக்க விழாவில் பேசிய துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அகத்தர உறுதி மையம் சாா்பில், நிா்வாக செம்மையில் இணைய மேம்பாடு என்ற தலைப்பில் பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கான மின் ஆளுமைப் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடை பெற்றது.
இந்த விழாவுக்கு துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக மின் ஆளுமை மாவட்ட மேலாளா் ஜி. சத்யபிரியா சிறப்புரையாற்றினாா். பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சி. வேதிராஜன் வாழ்த்திப் பேசினாா்.
இதில் பல்கலைக்கழக துணைப் பதிவாளா்கள், உதவிப் பதிவாளா்கள், கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், பொறியாளா்கள், உதவி தொழில்நுட்ப அதிகாரிகள், உதவியாளா்கள், நூலக உதவியாளா்கள், கணினி ஆய்வக உதவியாளா்கள், பதிவறை எழுத்தா்கள் உள்ளிட்ட நிா்வாகப் பணியாளா்கள் கலந்துகொண்ட னா். முன்னதாக, அழகப்பா பல்கலைக்கழக அகத்தர உறுதி மைய இயக்குநா் ராம்நாத் வரவேற்றாா். துணைப் பதிவாளா் பா. சின்னையா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

