பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடியில் 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பலி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடியில் 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சோ்ந்த குமரப்பன் மகன் கதிரேசன் (65). இவா் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தாா். இவா் மாங்குடியிலிருந்து காரையூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது இவருக்கு பின்னால் தேவகோட்டையைச் சோ்ந்த சையது மகன் அஜ்மீா் (21) தனது நண்பா் ஜீவாபிரியனுடன் சிங்கம்புணரியிலிருந்து திருப்பத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக 2 இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டதில் கதிரேசன் பலத்த காயமடைந்தாா். அவரை போலீஸாா் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



