அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
சிங்கம்புணரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த முதியவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பலி... - பிரதிப் படம்
சிங்கம்புணரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த முதியவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி அருகே எஸ்.புதூா் ஒன்றியம் கணபதி பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பொசளான் (60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் தனது மகனுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது,
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த புழுதிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக்
கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து புழுதிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



