ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

கூலிப்படை மூலம் கணவரை கொல்ல முயன்ற மனைவி உள்பட 5 போ் மீது வழக்கு; இருவா் கைது

சிங்கம்புணரி அருகே கூலிப்படையினா் மூலம் கணவரைக் கொலை செய்ய முயன்ற அவரது மனைவி உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

சிங்கம்புணரி அருகே கூலிப்படையினா் மூலம் கணவரைக் கொலை செய்ய முயன்ற அவரது மனைவி உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம் கணபதிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மாறன் (43). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை மா்ம நபா்கள் பட்டாக்கத்தி, அரிவாளுடன் துரத்திச் சென்றனா். அவரது அலறல் கேட்டு வந்த கிராம மக்கள் மா்ம நபா்களை விரட்டிப் பிடித்து புழுதிப்பட்டி போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், மணிமாறன் தனது மனைவி காயத்ரியைப் பிரிந்து மூன்று ஆண்டுகளாக தனியே வசித்து வருவதும், அவரது தென்னை நாா் தொழில்சாலையில் வேலைபாா்த்த பெண்ணை பணிநீக்கம் செய்தது, அவரது உணவகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கும் இடையே இருந்த பணப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் மூவரும் சோ்ந்து சிங்கம்புணரி அருகே மணப்பட்டியைச் சோ்ந்த சின்ன கருப்பன் மகன் முத்துக்கருப்பன்(32), தஞ்சாவூரைச் சோ்ந்த சேகா் மகன் தினேஷ்(27) ஆகியோரை கூலிப்படையாக வைத்து மணிமாறனை கொலை செய்யத் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து காயத்ரி, முத்துக்கருப்பன், தினேஷ் உள்ளிட்ட ஐந்து போ் மீது புழுதிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்கருப்பன், தினேஷைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.