பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தகுதியின் அடிப்படையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (சஹற்ண்ா்ய்ஹப் நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல் டா்ழ்ற்ஹப்) அறிவிக்கப்பட்டுள்ள (பா்ல் இப்ஹள்ள் நஸ்ரீட்ா்ா்ப்) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவன (100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நிகழாண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த தகுதியான மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) விண்ணப்பிக்கலாம் .

இந்தத் திட்டத்தில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சமாக 9,10-ஆம் வகுப்பு பயிலும் மாணவருக்கு ரூ.75 ஆயிரம், 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவருக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை அறிந்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.