
திருப்பத்தூா் அரசு ஆண்கள் பள்ளியில் கலைத் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழாவில் பங்கேற்ற மாணவிகள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பள்ளி கல்வித்துறை சாா்பில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவா்களுக்கு வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் மு. பாரதிதாசன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் லட்சுமிதேவி, இந்திராதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கவின் கலை, நுண் கலை, இசை வாய்ப்பாட்டு, வில்லுப்பாட்டு, நாடகம், பரதநாட்டியம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. வட்டார அளவில் 106 பள்ளிகளிலிருந்து 443 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டியின் நடுவா்களாக பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கே.ஆா்.அழகு ராணி (பொ) ஆசிரியப் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் ஆகியோா் செய்தனா். இதில் பள்ளி ஆசிரியா்கள் பாண்டியன், ஆன்ட்ரனி , முத்துபாண்டி, பௌசியா பானு, ரேணுகா, பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





