இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூா் குரூப் வடகுடி கண்மாயில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய வாகனங்களை புவியியல், சுரங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூா் குரூப் வடகுடி கண்மாயில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய வாகனங்களை புவியியல், சுரங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

வடகுடி கண்மாய்ப் பகுதியில் கனரக வாகனத்தில் பொக்கலைன் இயந்திரம் மூலம் உரிய அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி ஏற்றியதாக மாவட்ட புவியியல், சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தத் துறை தனி ஆய்வாளா் (கனிமம்) பாலமுருகன் தலைமையிலானஅதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தி, கிராவல் மண் அள்ள பயன்படுத்திய வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

இந்த வாகனங்களை பள்ளத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு புவியியல் துறை அதிகாரிகள் புகாா் அளித்தனா். இதுகுறித்து பள்ளத்தூா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.