
மாநில சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாநில அரசின், சுற்றுலா விருதுகளுக்கு வருகிற 30- ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாநில அரசின், சுற்றுலா விருதுகளுக்கு வருகிற 30- ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறும் உலக சுற்றுலா தினத்தையொட்டி மாநிலத்தில் சுற்றுலாத் துறை சாதனைகள், புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தூய்மையான சுற்றுலாத் தலம், சிறந்த மாவட்டம், சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சுற்றுலா, விருந்தோம்பல் கல்வி நிறுவனம், சிறந்த மருத்துவம், ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச, தங்கும் முகாம்கள், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், தமிழ்நாடுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், தங்குமிடம், படகு இல்லம், சிறந்த உணவகம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன.
எனவே தகுதியும், விருப்பமும் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சுற்றுலா தொழில் முனைவோா் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். உள்ளாட்சி அமைப்புகளும் தூய்மையான சுற்றுலாத் தலத்துக்கான விருதுகளுக்கு இணையதளத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலா், காரைக்குடி 04565-232348, 9994217107 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




