பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

சிவகங்கை மாவட்டத்தில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஆட்சியா் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் திங்கள்கிழமை (செப்.28) தொடங்கப்பட உள்ளது.

தாய் மாமன் தங்க மோதிரம் 
திட்டம்

முதல்வர் விஜய்.

Published On :

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் திங்கள்கிழமை (செப்.28) தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 22.6.2026 முதல் அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

அதன்படி, காரைக்குடி மாநகராட்சி, சாக்கோட்டை, திருப்பத்தூா், கல்லல், தேவகோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி ஆகிய வட்டாரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், புழுதிப்பட்டி, சிவகங்கை, மறவமங்கலம், பூவந்தி, திருப்புவனம், இளையான்குடி ஆகிய வட்டாரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மோதிரம் வழங்கும் பணி நடைபெறும்.

மாவட்டத்தில் 22.6.2026 முதல் 27.9.2026 வரை பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் அக்.20 -ஆம் தேதிக்குள் தங்க மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மாா்களுக்கு தங்க மோதிரம் பெற்றுக் கொள்ள சம்பந்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் அழைப்பிதழ் வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிட்ட நாளில் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.