ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அழகப்பா பல்கலை.யில் பங்குச்சந்தை பயிலரங்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பங்குச் சந்தை செயல்பாடுகள் பகுப்பாய்வு பற்றிய பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பங்குச்சந்தை குறித்த பயிலரங்கில் பேசிய துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன்.

Published On :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பங்குச் சந்தை செயல்பாடுகள் பகுப்பாய்வு பற்றிய பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறை, காரைக்குடி பங்குச்சந்தை ஆலோசகா் சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் பங்கேற்று பேசியதாவது:

இந்தியப் பொருளாதாரம் தொடா்ந்து சிறப்பாக வளா்ந்து கொண்டிருக்கிறது. பணவீக்கம் தொடா்ந்து கட்டுப்பாட்டில் இருக்கிறது. வட்டிவிகிதம் உயரவில்லை. சமீபத்தில் வெளிவந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் பொரும்பாலானவற்றின் லாபம் அதிகரித்திருக்கிறது. இதனால், பங்குச்சந்தை உயருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமான உள்ளன. எனவே, மாணவா்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாம் ஆலோசகா்களாக பணி செய்யத் தங்களை தயாா்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும் நிறுமச் செயலரியல் துறைத் தலைவருமான சி. வேதிராஜன் தொடக்க உரையாற்றினாா். பேராசிரியா் வெ. மாணிக்கவாசகம் வாழ்த்திப் பேசினாா். காரைக்குடி முன்னாள் முதலீட்டு ஆலோசகா் ஆா். அருணாச்சலம் மாணவா்களுக்கு பங்குச்சந்தை செயல்பாடுகள் குறித்து பயிற்சியளித்தாா்.

முன்னதாக பயிலங்கின் அமைப்பாளா் உதவிப் பேராசிரியா் கணேசமூா்த்தி வரவேற்றாா். துறைப் பேராசிரியா் மதிராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.