பெரியகுளத்தில் திருக்குறள் போட்டிகள்

பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், திருக்குறள் போட்டிகள் வரும் 19 முதல் 21 ஆம் தேதி வரை 3 நாள்கள் என்.எஸ்.என். சரஸ்வதி திருமண மஹாலில் நடைபெறுகிறது. 
Updated on
1 min read

 பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், திருக்குறள் போட்டிகள் வரும் 19 முதல் 21 ஆம் தேதி வரை 3 நாள்கள் என்.எஸ்.என். சரஸ்வதி திருமண மஹாலில் நடைபெறுகிறது. 

  இதில் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு, கவிதைப்  போட்டிகள் நடைபெறுகின்றன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பெரியகுளம் நகர் பகுதியிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம். இதில், 1330 குறள்களை சரியாக ஒப்பிப்போருக்கு ரூ. 1330 பரிசாக வழங்கப்படுகிறது.

  கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டிகளில் பெரியகுளம் நகர் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதியிலுள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

  இப்போட்டிகளில் பங்கு பெறுவோர், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்,  கல்லூரி முதல்வர் ஆகியோரது கையொப்பத்துடன், புலவர் ராஜரத்தினம், தமிழ் இலக்கிய மன்றம், சர்வோதய சங்க கதர் கடை, மூன்றாந்தல், பெரியகுளம் - 625601 என்ற முகவரியில், வரும் 10 ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com