சோலார் பேட்டரி திருடிய சிறுவன் கைது
போடியில், பேரூராட்சிக்கு சொந்தமான சோலார் பேட்டரியை திருடிய சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


போடியில், பேரூராட்சிக்கு சொந்தமான சோலார் பேட்டரியை திருடிய சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
போடியை அடுத்துள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பல இடங்களில் சோலார் மின் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போடி கிருஷ்ணா நகரில் 7 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தெரு விளக்குகள் எரியவில்லை. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது சோலார் மின் தெருவிளக்குகளில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதனிடையே போடி வினோபாஜி காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த பேட்டரிகளை விற்க முயன்றது தெரிந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...