விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆண்டிபட்டி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாநூற்பாலையில் வியாழக்கிழமை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:24 pm

DIN

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாநூற்பாலையில் வியாழக்கிழமை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளை சந்தித்து  குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் துப்புரவு பணிகள் குறித்து விசாரித்து கூடுதல் பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தினார்.
 அதே போல் ஆண்டிபட்டி அருகே செயல்படும் அண்ணாநூற்பாலையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். அப்போது ஆலையில் புதியதாக நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை தொடக்கி வைத்தார். பின்னர் தேனிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.