ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா: ஆட்சியர் பட்டங்களை வழங்கினார்

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாவட்டஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:42 am IST

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாவட்டஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 2012 - 18 கல்வியாண்டில் மருத்துவ பட்டப்படிப்பு படித்த 97 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி  ஆட்சியர் பேசியதாவது: மருத்துவ படிப்பை முடித்து மருத்துவர்களாக செல்லும் மாணவர்கள் அனைவரும் மனித நேயமிக்க மருத்துவர்களாக பணியாற்றி தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து மருத்துவம் சார்ந்த சேவைகளும் பொதுமக்களுக்கு கிடைத்திட செய்ய வேண்டும்.  கடந்த மாதத்தில் நடைபெற்ற குரங்கணி காட்டுத்தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்கவும், அவர்களுக்கு உரிய முதலுதவி, மருத்துவ சேவை மற்றும் சிகிச்சையை உரிய நேரத்தில் வழங்கிய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன் என்றார்.
விழாவில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, துணை முதல்வர் எழிலரசன், துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.