தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு புளி மகசூல் குறைந்துள்ளதுடன், விலை குவிண்டால் (100 கிலோ) ஒன்று ரூ.7,500 ஆகவும் உயர்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் கூடலூர், கம்பம், கோம்பை, தேவாரம், கோம்பை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புளி சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு புளி விளைச்சல் அதிகரித்ததுடன், தோல் நீக்கிய புளி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,500 வரையும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கோடை மழை பொய்த்ததால், பல இடங்களில் புளிய மரங்களில் பூக்கள் கருகி விட்டன. இதனால் தற்போது மகசூல் குறைந்துள்ளது. மேலும், நகர் புறங்களை ஒட்டிய பகுதிகளில் புளியந்தோப்புகள் அழிக்கப்பட்டு, வீட்டடி மனையிடங்களாக உருவாகி வருவதால் புளி சாகுபடி பரப்பளவு மற்றும் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.
தற்போது, தோல் நீக்கிய புளி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,500 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. புளி மகசூல் குறைந்தாலும் விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு நாளைக்கு 100 - 150 சிக்ஸர்கள்; ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் பேசிய முகுல் சௌதரி!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - தனுசு
காரைக்குடி: வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்!

கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்: காங்கிரஸ்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

