குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கம்பத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 59 பெண்கள் உள்பட 204  பேர் கைது

கம்பத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 59 பெண்கள் உள்பட 204  பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:17 am IST

கம்பத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 59 பெண்கள் உள்பட 204  பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர். 
காஷ்மீரில் சிறுமி ஆஸிபா வழக்கில் நீதி வேண்டி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 50 சிறுவர், சிறுமியர்களை அழைத்து கொண்டு, கம்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  ஊர்வலமாக சென்றனர். கம்பம் வடக்கு போலீஸார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, சிறுவர் சிறுமியர்களை, கட்டாயப்படுத்தி ஊர்வலம் செல்ல வைத்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில், இரண்டு பேரை கைது செய்தனர். 
போலீஸார் பொய்வழக்கு போடுவதாக கூறி, செவ்வாய்க்கிழமை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்போவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறிவித்தனர், இதற்கு போலீஸார் அனுமதி தரவில்லை. 
இந்நிலையில், திட்டமிட்டபடி ஆர்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறிவித்தனர்.  மாலை சுமார் 5 மணியளவில்,  திடீரென ஏ.கே.ஜி.திடலில் ஆண்களும், பெண்களுமாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். காவல்துறையை கண்டித்தும், ஆஸிபாவுக்கு நீதி வழங்கக்கோரியும், கோஷமிட்டபடி தடையை மீறி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, 59 பெண்கள் உள்பட  204  பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.