திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் திங்கள்கிழமை, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மை நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் அழகர். ஆட்டோ ஓட்டுநர். இவர் சித்ரா பெளர்ணமியையொட்டி, தனது குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு ஆட்டோவில் வந்தார். பின்னர், கள்ளழகரை தரிசிக்க திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். கப்பலூர் அருகே வந்தபோது, ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அழகரின் மகள் வீரலெட்சுமிக்கு (12) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வீரலெட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், "நான்கு வழிச்சாலையை புதுப்பிக்க சாலையில் உள்ள தார் மட்டும் பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால், சாலை சேதமானதோடு, சாலையோரம் மணலும் குவிந்துள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.