ஆண்டிபட்டி தாலுகாவில் பயிரிடப்பட்டுள்ள அவரைச் செடிகளில் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால், அவற்றுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் விளைச்சல் தருவதால், பெரும்பாலான விவசாயிகள் அவரை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும், 2 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது தேனி மாவட்டத்தில் மழை பெய்தாலும், அவரைச் செடிகளில் புழு தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால், அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால், காய்கள் கருப்பு நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும் மாறியுள்ளன.
புழுக்களை ஒழிக்க விவசாயிகள் மருந்துகள் மற்றும் உரங்கள் இட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இதனால், விளையும் அவரை காய்களில் பாதியை கீழே கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சந்தையில், அவரைக் காய்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. புழு தாக்குதலால் வருவாய் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற புழு தாக்குதல் மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால், அவரை பயிரிட்ட விவசாயிகள் பலர் இன்று வேறு சாகுபடிகளுக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புழு தாக்குகள் குறித்து விவசாயிகள் வேளாண்மைத் துறையினரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக பிரசாரம்: அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கிவைத்தார்

பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் உயிரிழப்பு






